சிறையிலுள்ள டக்ளஸ், ஜோன்ஸ்டன் மற்றும் அவரின் மகன்களுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம்
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவர்களது இரண்டு மகன்களும் தற்போது மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டிலிருந்து உணவு
வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்களின் குடும்பத்தினர் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர சிறை அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உணவைப் பெற்று வருகிறார்.
மேலும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அவர் தினமும் பயன்படுத்தும் மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri