வெனிசுலா எண்ணெய் விநியோகம்: முழுவதையும் கட்டுபடுத்திய டிரம்ப்பின் அடுத்த அறிவிப்பு
வெனிசுலாவின் இடைக்கால அரசாங்கம் அமெரிக்காவிற்கு 50 மில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெய்யை வழங்கும் என்றும், அந்த வருமானம் ஜனாதிபதியாக "தன்னால் கட்டுப்படுத்தப்படும்" என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது Truth Social சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எண்ணெய் விலையில் சரிவு
அந்த பதிவில், வெனிசுலாவில் உள்ள இடைக்கால அதிகாரிகள் 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரையான உயர் ரக எண்ணெய் சந்தை விலையில் விற்கப்படும்.
இதன் மூலம் கிடைக்கும் பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அது தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று (07) அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது.
அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் (WTI) விலை 88 சதம் அல்லது 1.54 சதவீதம் குறைந்து, GMT நேரப்படி அதிகாலை 1.14 மணியளவில் ஒரு பீப்பாய்க்கு 56.25 டொலராக சரிவடைந்துள்ளது.
இதேவேளை, இந்த வார இறுதியில் வெள்ளை மாளிகையில் எண்ணெய் நிறுவன நிர்வாகிகளை டிரம்ப் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, வெனிசுலாவின் நலிந்த எண்ணெய் துறையை மீட்டெடுப்பதற்கான வழிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெனிசுலாவின் எண்ணெய் இருப்புக்கள், மிகவும் தடிமனாகவும் கனமாகவும் இருப்பதால் அதைப் பிரித்தெடுக்க, கொண்டு செல்ல மற்றும் பயன்படுத்தக்கூடிய எரிபொருட்களாக சுத்திகரிக்க சிறப்பு உபகரணங்கள் தேவைப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri