பிரதமர் ஹரிணிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைச் சேகரிக்கும் பணி இன்று ( 7.01.2026) முதல் ஆரம்பிக்கப்படும் என்றார்.
கையொப்பம் சேகரிக்கும் பணி
கல்வி சீர்திருத்தக் கொள்கையின் கீழ், ஆறாம் தரத்திற்காக தயாரிக்கப்பட்ட முன்மாதிரி புத்தகம் ஒன்றில், தன்பால் பாலியல் தொடர்பாளர்களைத் தேடும் இணையதளத்தின் பெயர் ஒன்று அச்சிடப்பட்டிருந்தமை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவே பொறுப்பேற்க வேண்டும்.
மதத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் பொது நிதி நாசமாக்கப்பட்டுள்ளன.

அதன்படி, எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்றக் குழுவும் தலைவர்களும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான கையொப்பங்களைப் பெற்ற பின்னர், விரைவில் பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்க்கட்சியின் தலைமை அமைப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam