நோர்வூட் பிரதேச சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : விடுக்கப்பட்ட கோரிக்கை
நுவரெலியா - பொகவந்தலாவ நகரில் காணப்படும் குப்பைகளைச் சேகரிக்க நோர்வூட் பிரதேச சபை அதிக வரி அறவிடுவதாகத் தெரிவித்து பொகவந்தலாவ நகர வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று (06.01.2026) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமாராக 200 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்துள்ளதுடன், பொகவந்தலாவ நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
பணம் கொடுக்க முடியாது
பொகவந்தலாவ பஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், பிரதான நகரம் ஊடாக செல்வகந்த சந்தி வரை சென்று, மீண்டும் பேரணியாக பொகவந்தலாவ தண்டாயுதபாணி ஆலயம் முன்னரே திரும்பி முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பொகவந்தலாவ நகரப் பகுதியில் நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகளை நோர்வூட் பிரதேச சபை சேகரிப்பதற்கு அதிகூடிய வரியைக் கோருவதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், “நகரப் பகுதியில் உள்ள சேகரிக்கப்படும் குப்பைகளுக்கும் நாம் பெறும் தண்ணீருக்கும் நோர்வூட் பிரதேச சபைக்கு நாங்கள் வருடம் வருடம் வரிப்பணம் செலுத்தி வருகின்றோம்.
தற்போது பொகவந்தலாவ நகரில் குவியும் குப்பைகளைச் சேகரிக்க நாளாந்தம் 200 ரூபாவை மேலும் செலுத்துமாறு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கோரியுள்ளார்.

ஆனால், நாம் ஒருபோதும் குப்பைக்கான வரிப்பணத்தைச் செலுத்தப்போவதில்லை“ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எமது பிரச்சினைகள் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“எடுக்காதே எடுக்காதே குப்பைக்கான வரி எடுக்காதே”, “கட்டமாட்டோம் கட்டமாட்டோம் குப்பைக்கான வரியைக் கட்டமாட்டோம்”, “நாங்கள் செலுத்தும் வரிக்கு என்ன பயன்”, “மேலும் ஒரு வரிச் சுமையா குப்பைக்கு” போன்ற பாதைகளை ஏந்தியவாறு குறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri