மகளின் பிறந்த நாளில் தந்தை செய்த கொடூரம் - தந்தை, தாய், மகள் உயிரிழந்தமையின் பின்னணி
அனுராதபுரத்தில் குடும்பத்தினருடன் வீட்டின் மீது தந்தை தீ வைத்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கலென்பிந்துனுவெவ, பகுதியிலுள்ள வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது பிள்ளைகள், மனைவி மற்றும் அத்தை மீது தீ வைத்த நபர் நேற்று அதிகாலை 2.00 மணியளவில் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.
தீ வைத்த தந்தை, அவரது மனைவி மற்றும் 13 வயது மகள் ஆகியோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.
இருவரின் நிலை கவலைக்கிடம்
தீ விபத்தில் 66 வயதான பெண், 15 வயது மகள் மற்றும் அவரது 20 வயதான மகன் தீக்காயங்களுடன் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த 43 வயத தந்தை சமன் அனுருத்த பிரதீப்பிரிய மற்றும் அவரது மனைவியான 36 வயதுடைய பிரபாஷா சந்தமாலி ஆகியோர் சிறிது காலமாக குடும்ப தகராறில் ஈடுபட்டிருந்தனர்.
சமன் அனுருத்த அதிக குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும், அடிக்கடி குடிபோதையில் வந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளை தாக்கியதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் கலென்பிந்துனுவெவ பொலிஸார் சமாதானம் செய்து, குடும்பத்தை ஒன்றிணைந்து வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கணவரின் செயலால் விரக்தியடைந்த மனைவி, தனது மூன்று பிள்ளைகளுடன் கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசிக்கச் சென்றுள்ளார்.
தந்தையின் கொடூர செயல்
கணவர் வீடு திரும்புமாறு பலமுறை கேட்ட போதிலும், மனைவி தனது தாயார் வீட்டிலேயே தங்கியுள்ளார். நேற்று முன்தினம் மூத்த மகளின் பிறந்தநாள் என்பதால், அன்று இரவு தந்தை வீட்டிற்கு வந்திருந்தார்.

பிறந்தநாள் கேக் வெட்டிவிட்டு பிள்ளைகளுடன் இரவைக் கழித்த தந்தை, வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். நேற்று அதிகாலை 2.00 மணியளவில் வீட்டிற்கு வந்த சமன் அனுருத்தன், தனது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் அத்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர், தானும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இந்த சம்பவம் நடந்த நேரத்தில், 20 வயது மூத்த மகன் வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதை கண்ட 20 வயது மகன், வீட்டின் நடுவில் இருந்த தனது தாய், இரண்டு சகோதரிகள் மற்றும் பாட்டியைக் காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
தாய், பாட்டி மற்றும் ஒரு சகோதரியை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்ற போதிலும், தந்தையையும் மற்ற சகோதரியையும் காப்பாற்ற முடியவில்லை. தந்தையும் சகோதரியும் வீட்டிற்குள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
பாட்டியும் சகோதரியும் பலத்த தீக்காயங்களுடன் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் இருந்து உயிர் தப்பிய 20 வயது மகன் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
“என் தங்கையின் பிறந்தநாளுக்கு அப்பா கேக் கொண்டுவந்தார். அப்பா அதனை எங்களுக்கு ஊட்டிய பின்னர் நாங்கள் தூங்கச் சென்றோம். நேற்று அதிகாலையில், வீட்டிற்குள் ஒரு பெரிய தீ எரிவதைக் கண்டேன். என் அம்மா, சகோதரி மற்றும் பாட்டி தீயில் சிக்கிக்கொண்டனர். நான் அவர்களை மீட்டு வெளியே அழைத்து வர முயற்சித்தேன். ஆனால் என்னால் காப்பாற்ற முடியவில்லை. என் அப்பா அவர்களுக்கு தீ வைத்துள்ளார். அவர்தான் தீ வைத்துள்ளார் என்பது பின்னர்தான் தெரிந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார். கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam