செம்மணி புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டும்..! அமைதி வழிப் போராட்டத்தில் குதித்த அருட்தந்தையர்கள்
செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று(30.07.2026) காலை அரியாலையில் இடம்பெற்றுள்ளது.
யாழ் மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ அருட்தந்தையர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது, அதிகாலை புனித யூதாதேயு தேவாலயத்திலிருந்து ஆரம்பித்து செம்மணி சிந்துபாத்தி மயானம் வரை அமைதி வழி பேரணியாக நடைபெற்றுள்ளது.
ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் - பல தகவல்கள் அம்பலம்
அவசர கோரிக்கை
இதன்போது “மனித மாண்பை மதிப்போம் உண்மையை நிலை நாட்டுவோம்” “செம்மணிக்கு சர்வதேச நீதி வேண்டும்”, “உலகமே செம்மணியை மறந்து விடாதே!” உள்ளிட்ட கோஷங்களை அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு அமைதி வழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச நீதியை வலியுறுத்த வேண்டும் என்றும் யாழ் மறை மாவட்டத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam