யாழ்.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்! பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் பொதுமக்கள் முறுகல் (PHOTOS)
யாழ்ப்பாணம் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வளங்கள் இடைநிறுத்தப்பட்டமையால் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஏ9 வீதியை மறித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பெட்ரோல் வாங்குவதற்காக அரச உத்தியோகத்தர்கள் தனியான வரிசையிலும் பொதுமக்கள் தனியான வரிசையிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் எரிபொருள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் திடீரென எரிபொருள் முடிந்துவிட்டதாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் நிலவியுள்ளதுடன், வீதியை மறைத்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பொலிஸார் வருகைதந்து நிலைமையினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.


யாழ் - கண்டி நெடுஞ்சாலையை முடக்கி போராட்டம்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ .ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri