இராணுவ முகாமில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வைத்தியர்களுக்கு சந்தர்ப்பம்! இராணுவத்தளபதி இணக்கம்
நாட்டில் தொடரும் எரிபொருள் நெருக்கடி காரணமாக அருகாமையில் உள்ள இராணுவ முகாமில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு இராணுவத் தளபதியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வைத்தியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்கும் போது கலவரம் ஏற்படும் சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கர்ப்பிணி பெண்கள் தாம் கர்ப்பம் தரித்துஏழு மாதங்கள் ஆகும் போது உடுப்பதற்கு தேவையான உடைகளுக்கு மேலதிகமாக ஒரு கலன் எரிபொருளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை பெண் ஊழியர்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri