கொழும்பிற்கு படையெடுக்கவுள்ள பெருந்திரளானோர்..! ஜனாதிபதி செயலக வளாகத்தில் பலத்த பாதுகாப்பு
அரச பயங்கரவாதம் இனியும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யக் கோரியும், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை (PSTA) உடனடியாகக் கைவிடுமாறு வலியுறுத்தியும் கொழும்பில் இன்று கண்டனப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இன்று (13.10.2026) பிற்பகல் 2.30 மணிக்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வலியுறுத்தப்படவுள்ள விடயம்
காலங்காலமாகப் பயன்பாட்டிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முற்றாக இரத்துச் செய்ய வேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைக் (PSTA) கைவிடுமாறும் இந்தப் போராட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
அனைத்துவிதமான அரச அடக்குமுறைச் சட்டங்களுக்கும் எதிராகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தை முன்னிட்டு அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.