மூதூரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை-மூதூர் பாடசாலையில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(8) மூதூர் வலயக் கல்வி பணிமணைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் சேவைக்குள் தம்மை இணைப்புச் செய்யுமாறு கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர், கிண்ணியா, கந்தளாய், கோமரங்கடவல, திருகோணமலை ஆகிய 5 கல்வி வலயங்களில் உள்ள, அரச பாடசாலைகளில், ஆசிரியர்களாக இணைப்புச் செய்யப்பட்ட, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது எங்கள் விடயத்தில் தவறு இழைக்கும் அரசு நீதியை பெற்றுத் தருமா , ஐந்து வருடங்களாக பாடசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைப்பு செய்யப்பட்டு ஆசிரியர்களாக பணியாற்றுகின்ற எங்களுக்கு நீதி வேண்டும் போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தின் முடிவில் போராட்டக்காரர்களால் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகரவிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







