மித்தெனிய நகரத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டம்
போதைப்பொருள் மோசடி அரசியல்வாதிகளுக்கு எதிராக மித்தெனிய நகரத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(08) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மித்தெனிய நகரத்தின் மத்தியில் கூடிய பெருந்தொகையான மக்கள் போதைப்பொருளுக்கு எதிராகவும் அதில் தொடர்புபட்டுள்ள மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக பாதாகைகளை ஏந்தியவாறும் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரு அரசியல்வாதிகள் கைது
குறித்த நகரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தும் இரசாயனங்கள் தொடர்பில், மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த இரு அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டதையடுத்தே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தும் இராசாயனங்கள் நேற்று(07) இரவு மித்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.
எமது எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் போதைப்பொருள் மோசடியில் ஈடுபடும் அரசியல்வாதிகளை நம்பி எவ்வாறு நாட்டை ஒப்படைப்பது! இவ்வாறானவர்களுக்கு பாரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
