யாழ்.மந்திரி மனைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு
தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றையதினம்(22.09.2025) மந்திரி மனைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
முன்னர் பெய்த கனமழை காரணமாக
மந்திரி மனையானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக உடைந்து விழுந்துள்ளது.
இந்நிலையில் அதனை பாதுகாக்குமாறு கோரியே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "இலங்கை அரசே தமிழர்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு, இந்த இடத்தை உரிமை கோருபவரே மந்திரி மனையை இடித்துவிட்டு உல்லாச விடுதியா கட்டப்போகின்றீர்கள், தொல்லியல் திணைக்களமே பௌத்த சின்னங்களை பாதுகாப்பதுபோல் தமிழரின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு, மன்னன் சொத்து மக்கள் சொத்து தனிநபரே உரிமை கொண்டாடாதீர்கள்" போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 17 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
