Reecha தொடர்பில் வெளியான காணொளி.. அம்பலமாகும் சதித்திட்டம்!
கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பில் அண்மையில் வெளியான காணொளி மிக பேசுபொருளாகியிருந்தது.
றீச்சாவிற்கு சென்றிருந்த, தன்னை சூழலியலாளர் என்று அறிமுகப்படுத்திய ஒருவர் வெளியிட்ட காணொளியே சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.
றீச்சா ஒருங்கிணைந்த பண்ணைக்கும் அதன் உரிமையாளரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் குறித்த காணொளி அமைந்திருந்தது.
சூழ்ச்சி நடவடிக்கைகள்
இந்நிலையில், அந்த சம்பவம் பதிவான சீசிரீவி காணொளியை உண்மைகளை அம்பலப்படுத்தும் வகையில் றீச்சா வெளியிட்டிருந்தது.
தொடர்ந்து, தற்போது யாழ். மாவட்டத்தில் உள்ள Crafttary தொழில் பயிற்சி நிறுவன உரிமையாளர் சுரேஷ்புதி (SureshPuthi) இந்த சம்பவத்தின் பின்னணியில் றீச்சாவுக்கு எதிராக சதித்திட்டம் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "றீச்சாவின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட சூழ்ச்சிகள் மற்றும் முயற்சிகள் எனக்கு தெரியும்.
இந்த சூழ்ச்சிகள் மிகப் பிரபல்யமான நபர்களால் உருவாக்கப்பட்டவை. அதற்காக மிகப் பெரிய அளவிலான ஒன்றுகூடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 15 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri
