செம்மணி விவகாரத்தை முன்வைத்து கொழும்பிலும் போராட்டம்
செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதிகோரியும், அகழ்வுப்பணிகளை தடையின்றி தொடர வலியுறுத்தியும் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
'நீதிக்கான மக்கள் சக்தி' அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள்
"செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தடையின்றி தொடர வேண்டும்" மற்றும் "காணாமல்போன உறவுகளுக்கு நீதி வேண்டும்" போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டவர்கள்,"செம்மணி இனப்படுகொலையின் சாட்சி", "செம்மணிக்கு நீதி வழங்கு!", "தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்" மற்றும் "செம்மணி மனிதப் புதைகுழியின் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுங்கள்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் பொறிக்கப்பட்ட பெரிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 19 மணி நேரம் முன்
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam