பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஆசிரியரின் நியமனத்தை ரத்து செய்ய கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்(Photos)
வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் ஒருவரின் நியமனத்தை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர் இன்று(04.04.2023) ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
பாடசாலை முன்றலில் கூடியவர்கள் பொருத்தமான ஆசிரியரை நியமனம் செய், தற்காலிக நியமனத்தை ரத்துச் செய், 16 பாடசாலைகள் வெளியேற்றிய ஆசிரியர் வேண்டாம் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் எந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்
போராட்டத்தின் இறுதியில் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தனர்.
குறித்த மனுவில்,புதிய ஆசிரியர் ஒருவரை எமது பாடசாலைக்கு நியமித்து உள்ளதாக தகவல் அறிய பெற்றது. மேற்படி ஆசிரியரை பற்றி விசாரித்த போது அவர் மீது பல்வேறு முறைப்பாடுகள் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே அதிபர், குறித்த ஆசிரியரது நியமனத்தினை ஒத்தி வைப்பதுடன் நிரந்தரமாக ரத்து செய்து வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பழைய மாணவர்கள் சார்பிலும் கேட்டுகொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
