சவுதி சிறையில் உள்ள அனோஜனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்
சவுதி அரேபியாவில் சிறையில் உள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று(19) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் மற்றும் தூக்குக் கயிற்றின் உருவம் உள்ளிட்ட குறியீடுகள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும், அவரை விடுதலை செய்யுமாறு கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
கவனயீர்ப்புப் போராட்டம்
இதன்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போராட்டத்தின் பேச்சாளர் ஒருவர், இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே சிவராசா அனோஜன் தற்போதைய சட்ட சிக்கலில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, இந்த விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் கருத்திற்கொண்டு, சிவராசா அனோஜனை விடுதலை செய்து அவர் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து நிம்மதியாக வாழ்வதற்கு சவுதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், அனோஜனின் குடும்பத்தின் நிலைமையையும் கருத்திற்கொண்டு, அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.



