திருகோணமலையில் காணி உரிமை கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்!
திருகோணமலை மாவட்டத்தில், கன்னியா - பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள காணிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டம்
அப்பகுதி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை (11) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, 'எங்கள் காணி எங்களுக்கு வேண்டும்' என கோசங்களை எழுப்பியுள்ளனர்.
அத்துடன் திருமணம் செய்து ஒரு வீட்டில் மூன்று குடும்பங்கள் இருக்கிறோம். இதனால் இக் காணியை வேறு நபர்களுக்கு ஏன் வழங்க வேண்டும் இதனை நிறுத்த வேண்டும் எனவும் குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.




வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
