யாழ் மற்றும் வவுனியாவில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக தீப்பந்தப் போராட்டம் (Photos)
யாழ்ப்பாணம்
மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் தீப்பந்த ஊர்வல போராட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தலைமையில் இன்று (26.10.2023) இரவு இப் போராட்டம் நடைபெற்றது.
யாழ். நல்லூர் பகுதியிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட தீப்பந்த ஊர்வல பேரணியானது இளங்கதிர் சனசமூக நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது.
யாழில் போராட்டம்
போராட்டத்தில் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் மின்சார அதிகரிப்பிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தின் தொடராக யாழிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
மின் கட்டண உயர்வைக் கண்டித்து வவுனியாவில் தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியா - இலுப்பையடி முன்பாக குறித்த போராட்டம் இன்று (26.10.2023) மாலை முன்னெடுக்கப்பட்டது.
வறிய மக்களை கொல்லாதே
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் '' ரணில் - ராஜபக்ச அரசே மின் கட்டணத்தை குறை, மின் கட்டணத்தை கூட்டி வறிய மக்களை கொல்லாதே, மின் கட்டண உயர்வால் தற்கொலையை தூண்டாதே, ஜனாதிபதி ரணிலே வீட்டுக்கு போ'' என கோசங்களை எழுப்பியதுடன் தீப்பந்தங்களையும் ஏந்தியிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவாட்ட அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவரின் பிரதான ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரசிக்கா பிரியதர்சினி மற்றும் கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
