நகர அபிவிருத்தி பணிகள் சீரற்றவை..! பிரதேச சபை தலைவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து போராட்டம்
கொட்டகலை பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தலவாக்கலை நகரத்திற்கு அண்மையிலான குமாரகம மற்றும் தெவிசிறிபுர பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் இன்று(17.05.2026) இடம்பெற்றுள்ளது.
மக்களின் கோரிக்கைகள்
இதன்போது, தங்களது பிரதேசங்களின் அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டிய மக்கள், வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகள் பராமரிக்கப்படுவதில்லை, கால்வாய்கள் மற்றும் சிறுவர் பூங்கா சுத்தம் செய்யப்படுவதில்லை, வீதி விளக்குகள் பொருத்தப்படுவதும் பராமரிக்கப்படுவதும் இல்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், எல்லை நிர்ணயத்திற்கு முன்னர் இந்த சேவைகள் தலவாக்கலை - லிந்துலை நகர சபையினால் முறையாக மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது கொட்டகலை பிரதேச சபையின் கீழ் வந்த பின்னர் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் அடிப்படை சேவைகளை எளிதாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் குமாரகம மற்றும் தெவிசிறிபுர பகுதிகளை மீண்டும் தலவாக்கலை - லிந்துலை நகர சபையுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, பல்வேறு கோரிக்கை வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.
கோரிக்கைகளுக்கு மறுப்பு தெரிவித்த பிரதேச சபை தலைவர்
இந்த போராட்டத்தின் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜாமணி பிரசாத்திடம் வினவிய போது, மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுப்பதாக பதில் கொடுத்துள்ளார்.
அத்துடன், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்த பகுதிகளில் வீதிகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. வீதி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பொதுமக்களின் முறையான பராமரிப்பின்மை காரணமாக மீண்டும் காடுகள் வளர்ந்துள்ளதாகவும், வீதி விளக்குகளில் செயலிழக்கும் மின் குமிழ்களை பிரதேச மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும் பிரதேச சபை தவிசாளர் கூறியுள்ளார்.
மேலும், சிறுவர் பூங்காக்கள் முறையாக பயன்படுத்தப்படாததாலும் அவை பராமரிப்பின்றி காணப்படுவதாகவும், அடிக்கடி அந்த பகுதிகளுக்கு பணியாளர்களை அனுப்புவதற்கு போதிய மனித வளம் இல்லை என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 3 மணி நேரம் முன்
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan