இன அழிப்பிற்கு துணைப் போனதா காங்கிரஸ்..! இயக்குனர் டி.ராஜேந்தர் மற்றும் நடிகர் நிழல்கள் ரவி குமுறல்

TRajendar Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples Sri Lanka Government
By Kajinthan May 17, 2026 08:16 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையோட்டி தென்னிந்திய பிரபலங்கள் சிலர் தங்களின் இரங்கலையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

இதன்படி, முள்ளிவாய்ககால் எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் தினம் ஒரு துக்க தினம், எமது இதயத்தை ரணமாக்கிய அந்த நாள், எது இனத்தையே துடிதுடிக்க இழந்தோம். அதனை நினைத்து பார்க்கையில் வேதனையளிக்கிறது.

முதலமைச்சரை நான் சந்திக்க மாட்டேன்..! விஜய் தொடர்பான தனது மன நிலையை வெளியிட்ட ரஜினிகாந்த்

முதலமைச்சரை நான் சந்திக்க மாட்டேன்..! விஜய் தொடர்பான தனது மன நிலையை வெளியிட்ட ரஜினிகாந்த்

இன அழிப்பிற்கு துணைப் போன காங்கிரஸ்

அந்த உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். ஈழம் எப்போதும் மலரும் என்று தினம் தினம் ஏங்குகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நண்பர் விஜய் ஒரு இக்கட்டான கட்டத்தில் இருக்கிறார் என்றவுடன், காங்கிரஸ் கரம் நீட்டியது.

இன அழிப்பிற்கு துணைப் போனதா காங்கிரஸ்..! இயக்குனர் டி.ராஜேந்தர் மற்றும் நடிகர் நிழல்கள் ரவி குமுறல் | Did Congress Support Ethnic Cleansing

இதனை பார்க்கும் பொழுது இன்று திமுக கவலைப்படுகிறதே, இதே காங்கிரஸ் தானே அன்று எமது ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தார்கள்.

அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து சிங்கள இராணுவத்துக்கு துணை போனார்களே எப்படி? என்னுடைய தொப்புள்கொடி பந்தங்களுக்கு அந்த துன்பத்தை அள்ளிக் கொடுத்தார்களே எப்படி? முள்ளிவாய்க்காலில் அன்று இரத்த ஆறினை ஓடவிட்டார்களே எப்படி?

அப்பாவி தமிழர்கள் அன்று தங்களை இழந்த போது எனக்கு எப்படி வலித்திருக்கும்? அன்று எனக்கு எப்படி துடித்திருக்கும்? என் ஈழத் தமிழ் இனத்தின் மீது அன்றைக்கு அவன் போட்டான் வேட்டு, சிங்களவர்களோடு இந்த காங்கிரஸ் வைத்தது கூட்டு, இன்றைக்கு திமுகவோடு வைத்தது கூட்டு, நேரம் பார்த்து வைத்தது வேட்டு. இப்போது உங்களுக்கு வலிக்குதே. ஈழத் தமிழர்கள் காங்கிரஸால் படாத பாடுபட்ட போது எனக்கு எப்படி வலித்திருக்கும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

வலுவிழந்து வரும் தாழமுக்கம்! வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வலுவிழந்து வரும் தாழமுக்கம்! வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையை சூழ்ந்துள்ள பாரிய ஆபத்து! எகிறும் வெளிநாட்டு நாணயம் - கேள்விக்குறியாகும் மக்களின் வாழ்க்கை

இலங்கையை சூழ்ந்துள்ள பாரிய ஆபத்து! எகிறும் வெளிநாட்டு நாணயம் - கேள்விக்குறியாகும் மக்களின் வாழ்க்கை

இதேவேளை,  யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களின் அழுகுரல்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள அரசின் அடக்குமுறையை எதிர்த்து தமிழ் இனம் 30 ஆண்டுகள் உரிமைக்காக ஆயுதம் தூக்கி போராடியது. கடந்த 2009 மே 18 அன்று சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் அந்த யுத்தமானது மௌனிக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகின.

இன அழிப்பிற்கு துணைப் போனதா காங்கிரஸ்..! இயக்குனர் டி.ராஜேந்தர் மற்றும் நடிகர் நிழல்கள் ரவி குமுறல் | Did Congress Support Ethnic Cleansing

இந்த யுத்தத்தில் பல போர் குற்றங்கள் இடம்பெற்றன. ஆனால் 17 வருடங்கள் கடந்தும் இதுவரை அதற்கான நீதி கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட இனம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட வண்ணமே உள்ளது. இவை அனைத்தும் முடிவுக்கு வந்தால்தான் முள்ளிவாய்க்கால் மண்ணில் பலியாகிய இலட்சக்கணக்கான உயிர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையும். தயவுசெய்து தமிழ் இனத்தை வாழ விடுங்கள்.

எனது தொப்புள்கொடி உறவுகள் உயிர்களை, உடைமைகளை இழந்து நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஈழத்தமிழ் உறவுகளுக்காக எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்பதை அந்த உறவுகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் எடுத்துக்கூற விரும்புகிறேன் என்றார்.

  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US