முல்லைத்தீவில் நீதிகோரி வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம் (Video)
முல்லைத்தீவில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (30.03.2023) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஓ.எம்.பியும் வேண்டாம் நட்டஈடும் வேண்டாம், மரணசான்றிதழும் வேண்டாம்,இலஞ்சமும் வேண்டாம் போன்ற கோசங்களை தாங்கி சர்வதேச விசாரணையே தங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர ஒரே வழி சர்வதேசமே பதில் சொல் எனும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொருளாதார பிர்ச்சினை
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி ம.ஈஸ்வரி கருத்து தெரிவிக்கையில்,
சர்வதேச நீதிமன்றத்தில் எங்கள் உறவுகளுக்கு என்ன செய்தார்கள் என்பதை சொல்லவேண்டும், அதற்கான நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக போராடிக்கொண்டிருக்கின்றோம்.
சர்வதேசம் இலங்கைக்கு பொருளாதார பிரச்சினைக்கு நிறைய உதவி செய்து கொண்டிருக்கின்றது இதேபோல் எங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் சரியான நீதியினை பெற்றுத்தரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.
இன அழிப்பு தொடச்சியாக இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களும் ஆதாரமாக இருக்கின்றது நீதி கிடைக்கும் வரை எவரின் அழுத்தம் வந்தாலும் தொடர்ந்து போராடுவோம்.
எங்களுக்கு இந்த நட்டயீடு, மரணசான்றிதழ்கள், ஆற்றல்படுத்தல்கள் எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
