காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர் பிணையில் விடுதலை (Video)
புதிய இணைப்பு
காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர் டனிஸ் அலி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த டனிஸ் அலி, நேற்று சனிக்கிழமை (28) கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தின் பயணச்சீட்டு கவுன்டருக்கு அருகில் கலவரத்தில் ஈடுபட்டமைக்காக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
தொடருந்து நிலைய அதிகாரிகளின் தாக்குதலின் காரணத்தினாலேயே தனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான டனிஸ் அலியின் தந்தை குற்றம் சுமத்தினார்.
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் பயணச்சீட்டு தாமதம் தொடர்பில் சமூக ஊடகத்தில் ஒளிபரப்பு செய்ததன் மூலம் தனது மகன் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது தனது மகனை அதிகாரிகள் தாக்கியதாகவும், எனினும் தனது மகன் அடாத்தாக உள்நுழைந்ததால் தாக்கப்பட்டார் எனவும் போலியான முறைபாடு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
முதலாம் இணைப்பு
நேற்று கைது செய்யப்பட்ட காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான டனிஸ் அலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலி முகத்திடல் (அரகலய) மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர் டனிஸ் அலி நேற்று (27.10.2023) கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தின் பயணச்சீட்டு கவுன்டருக்கு அருகில் கலவரத்தில் ஈடுபட்டமைக்காக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரால் கைது
இந்த சந்தர்ப்பத்தின் போது டனிஸ் அலி மீது சிலர் தாக்குதல் நடத்தியதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட போராட்ட செயற்பாட்டாளர் டனிஸ் அலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் புதிய தாக்குதல் வியூகம்....! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
