ஜே.வி.பியின் சொத்து தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல்

Namal Rajapaksa Government Employee Sri Lanka Podujana Peramuna Sri Lanka Government
By Rakesh Apr 07, 2026 01:12 PM GMT
Report

"அரசாங்க தரப்பினரோ அல்லது ஜே.வி.பி. உறுப்பினர்களோ சொத்துக்களை கொண்டிருந்தால் அதனை 'சமூக மூலதனம்' என நியாயப்படுத்துகின்றனர். ஆனால், மற்றவர்கள் சொத்துக்களை கொண்டிருந்தால் அதனை திருட்டு சொத்து என முத்திரை குத்துகின்றனர்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தற்போதைய அரசியல் போக்குகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமைகள் குறித்து அவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வங்கிக்கணக்குகளிலிருந்து நேரடியாக பணத்தை இழந்துள்ள பலர்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

வங்கிக்கணக்குகளிலிருந்து நேரடியாக பணத்தை இழந்துள்ள பலர்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

சொத்துக்களுக்கு புதிய வரைவிலக்கணம் 

"அரசாங்கத் தரப்பினர் மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் கொண்டுள்ள சொத்துக்களுக்குப் புதிய வரைவிலக்கணம் கொடுத்து நியாயப்படுத்தும் போக்கு காணப்படுகின்றது.

ஜே.வி.பியின் சொத்து தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல் | Property Of Jvp Namal Announcement

அதேவேளை, அரச ஊழியர்களோ அல்லது எதிர்க்கட்சி அரசியல்வாதிகளோ சொத்துக்களைக் கொண்டிருந்தால் அவை உடனடியாகத் திருட்டுச் சொத்துக்கள் என முத்திரை குத்தப்படுகின்றன. இது ஒரு தெளிவான இரட்டை நிலைப்பாடாகும்.

கடந்த காலங்களில் எனக்கு எதிராகப் பரப்பப்பட்ட உகாண்டாவிற்கு 18 பில்லியன் டொலர் கொண்டு சென்றமை, தங்கக் குதிரைகள் மற்றும் லம்போகினி கார்கள் தொடர்பான கதைகள் அனைத்தும் வெறும் பொய்க்குற்றச்சாட்டுகள் என்பது இப்போது நிரூபணமாகி வருகின்றது.

எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளை, எனது பெயரையும் கௌரவத்தையும் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே நான் கருதுகின்றேன்.

மின்சாரக்கட்டணம் மற்றும் எரிபொருள் விலை

மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அரசாங்கம் முறையான நிவாரணங்களை வழங்கத் தவறிவிட்டது.

ஜே.வி.பியின் சொத்து தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல் | Property Of Jvp Namal Announcement

கொரோனா போன்ற பாரிய உலகளாவிய நெருக்கடி நிலவிய காலத்தில்கூட எமது அரசாங்கம் மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிவாரணத்தை வழங்கியதை இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

தற்போதைய ஜனாதிபதியும் அமைச்சர்களும் கடந்த காலங்களில் முக்கிய பதவிகளில் இருந்தபோது மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

எத்தகைய தேர்தல்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக உள்ளதுடன், மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி எமது அரசியல் பயணம் தொடரும்" - என்றும் நாமல் ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு விசேட பொருளாதார நிவாரணத்தொகுப்பு! சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்த ஜனாதிபதி

நாட்டு மக்களுக்கு விசேட பொருளாதார நிவாரணத்தொகுப்பு! சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்த ஜனாதிபதி

அவதானத்துடன் இருக்கவும்..! ஆட்பதிவுத்திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

அவதானத்துடன் இருக்கவும்..! ஆட்பதிவுத்திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US