நாமல் ராஜபக்சவுக்கு எதிராக முக்கிய வர்த்தகர் சாட்சியம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapakasa) எதிராக முன்னணி வர்த்தகர் ஒருவர் முக்கிய சாட்சியம் ஒன்றை வழங்கத் தயாராக இருப்பதாக மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வழக்கு தாக்கல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னணி வர்த்தகரின் நெருங்கிய சகா ஒருவரே இவ்வாறு நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் இரண்டொரு நாட்களுக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழு மேற்குறித்த வர்த்தகரிடம் சாட்சியம் பதிவு செய்து கொள்ளவுள்ளது.
அதன் பின்னர் மிக விரைவில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்படும் சாத்தியம் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri