முடக்க நிலை நீடிப்பானது பொருளாதாரத்தை பாதிக்கும்! – அஜித் நிவாட் கப்ரால்
முடக்க நிலை நீடிப்பானது பொருளாதாரத்தை பாதிக்கும் என ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாடு முடக்கப்படும் கால எல்லையை முடிந்தளவு குறைக்காவிட்டால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும்.
நாடு முடக்கப்பட்டுள்ளதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை சீர் செய்ய வேண்டுமாயின் நாட்டை கூடிய சீக்கிரம் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
எமக்கு தெரியும் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. அதேபோன்று வாழ்வாதாரமும் முக்கியமானது.
வாழ்வாதாரம் இல்லாமல் போவதனால் ஏற்படக்கூடிய வேதனைகள் அதனை இழந்தவர்களுக்கே தெரியும். முடிந்தளவு முடக்க நிலையை வரையறுத்துக்கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளுடன் வர்த்தகம் செய்ய வேண்டுமாயின் டொலர் தேவை அதற்காக நாம் டொலர்களை சம்பாதிக்க வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் சில தீர்மானங்கள் எடுக்க நேரிட்டது. அதன் ஓர் கட்டமாகவே வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.