“ஆலயங்கள் சம்பந்தமான முடிவுகளை அந்தந்த ஆலயங்கள் பார்த்துக் கொள்ளும்”
சிலர் அதிமேதாவித்தனமாக நடக்க முயல்கின்றதனால் தான் பிரச்சனைகள் வருகின்றது என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் (J.Mayurakkurukkal) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இறைவனுக்கு குறைவின்றி பூஜை நடக்க வேண்டும். அதற்கு ஆலயம் சார்ந்த ஒருசிலரோடு ஆலயத்தின் குருவும் இருந்தால் போதுமானது எனவும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும்,
ஆலய வழிபாடுகள் தொடர்பாக தற்காலச் சூழலில் நாம் ஒன்றை விளங்கி கொள்ள வேண்டும்.
அனைத்து வழிபாட்டிடங்களுக்கும் இராணுவ பொலிஸ் பாதுகாப்பு உள்ள போதும் எமது சைவ ஆலயங்களில் இற்றைவரை அந்த நடைமுறை இல்லை குறைவில்லாத பூஜைகள் நடைபெறுகின்றது. பக்தர்களின் வரவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சிலர் அதிமேதாவிதனமாக நடக்க முயல்கின்றதனால் தான் பிரச்சனைகள் வருகின்றது. இறைவனுக்கு குறைவின்றி பூஜை நடக்க வேண்டும்.
அதற்கு ஆலயம் சார்ந்த ஒருசிலரோடு ஆலயத்தின் குருவும் இருந்தால் போதும். மற்றையது ஆலயங்கள் சம்பந்தமான முடிவுகளை அந்தந்த ஆலயங்கள் பார்த்துக்கொள்ளும்.
நீங்கள் முண்டியடுத்து அறிக்கை விடுவதிலோ அல்லது பத்திரிகையாளர்களோடு முரண்படுவதோ, சுகாதார அதிகாரிகளோடு முரண்படுவதோ, அவர்களுக்கு கருத்து கூறுவதோ உங்கள் தனிப்பட்ட கருத்தே அன்றி அவை ஆலயங்களை சார்ந்த குருமார்களின் கருத்தோ, பரிபாலனசபையினரின் கருத்துக்களோ கிடையாது என்பதனை விளங்கிக்கொள்ளுங்கள்.
இவ்வாறான உங்கள் செயற்பாடுகளால் அமைதியாக நடைபெறுகின்ற வழிபாடுகளிற்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே அமைதியப் பேணி வழிபாடுகளிற்கு நல்வழியினை ஏற்படுத்துவதே எமது கடமையாகும்.
இது நவராத்திரி காலம் அவரவர் வீடுகளிலேதான் பூஜைகளை செய்கிறோம் வழமைபோல் அதனால் இம்முறையும் அப்படியே செய்யுங்கள்.
நாட்டு நிலமைகள் சீராகும் போது வழமைபோல் சிறப்பாக செய்துகொள்ளலாம் அதுவரை ஆலய வழிபாடுகளுக்கு அமைதியாக ஒத்துழைத்து செயற்படுங்கள். அதுவே அனைவருக்கும் நல்லதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
