பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பிரியந்தவின் சடலம்
பாகிஸ்தானின் சியல்கோர்ட் நகரில் அடித்துக்கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவதனவின் சடலம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சியல்கோர்ட் நகரில் தொழிற்சாலை முகாமையாளராக பணியாற்றி வந்த 48 வயதான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடல் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில்,பாகிஸ்தான் லாகூரியிலிருந்து புறப்பட்ட யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் மூலம் அவரது உடலை தாங்கிய பேழை நேற்று மாலை 5.10 மணியளவில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் நீர்கொழும்பு நீதித்துறை விசேட வைத்திய நிபுணர் டாக்டர் இளங்கரத்ன மற்றும் குருநாகல் நீதி வைத்திய அதிகாரி அஜித் ஜயசிங்க ஆகியோரினால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் பிரியந்தவின் சடலம் உறவினர்களிடம் அஞ்சலிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
தொடர்புடைய செய்திகள்...
பிரியந்தவின் கொடூர மரணம் குறித்து அறியாத தாயார்! குடும்பத்தினர் வெளியிட்டுள்ள உருக்கமான தகவல்
பிரியந்தவின் இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல் வெளியானது





வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam