பிரியந்தவின் கொடூர மரணம் குறித்து அறியாத தாயார்! குடும்பத்தினர் வெளியிட்டுள்ள உருக்கமான தகவல்
பாகிஸ்தானின் சியல்கோர்ட் நகரில் தொழிற்சாலை முகாமையாளரான 48 வயதான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடல் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில்,அவரது மரணம் தொடர்பிலும்,பிரியந்த கொல்லப்பட்ட விதம் குறித்தும் அவரது தாயாரிற்கு தெரிவிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
80 வயதான அவரது தாய் உடல் நிலை பாதிப்புக்குள்ளானவர். என்ன நடந்தது என எங்களால் அவருக்கு இன்னமும் தெரிவிக்க முடியவில்லை.அவர் தொடர்ந்தும் அழுதுகொண்டிருக்கின்றார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் இளையவரான பிரியங்க குமார, எப்படி கொல்லப்பட்டார் என்ற விபரத்தை அவரது தாயாரிடம் இன்னமும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில்,சமூக ஊடகங்கள் தொலைக்காட்சிகளை அவர் பார்ப்பதை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும்,பிரியந்த தாக்கப்படும் காட்சிகளை தாயார் பார்க்காமலிருப்பதை உறுதிப்படுத்த முயல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் லாகூரியிலிருந்து புறப்பட்ட யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் மூலம் அவரது உடலை தாங்கிய பேழை இன்றைய தினம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நாளை மறுதினம் இறுதிக் கிரியைகளை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்,சில சமயங்களில் குறித்த தினத்தில் மாற்றங்கள் ஏற்படலாமெனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்...
பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்டது ஏன்? மனைவியின் உருக்கமான பதிவு
பாகிஸ்தானிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது பிரியந்தவின் சடலம்!





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
