பாகிஸ்தானிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது பிரியந்தவின் சடலம்!
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூஎல் 186 விமானத்தின் மூலம் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதுடன், உயிருடன் எரிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரியந்தவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் லாகூரியிலிருந்து புறப்பட்ட யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் மூலம் அவரது உடலை தாங்கிய பேழை எடுத்துவரப்பட்டுள்ளது.
அந்த வகையில் சற்று முன்னர் பிரியந்த குமாரவின் உடல் கட்டுநாயக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
