பெருமளவில் இலாபம் ஈட்டும் தனியார் வகுப்புக்கள்
இலங்கையில் தனியார் வகுப்புக்களின் மூலமான வருடாந்த புரள்வு சுமார் 200 பில்லியன் ரூபா என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவு பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனியார் வகுப்புக்கள் தொடர்பில் உடன் ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைக் கட்டமைப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஒட்டுமொத்த பாடசாலைக் கட்டமைப்பினையும் பின்தள்ளி தனியார் வகுப்பு கலாசாரம் தலைதூக்கியுள்ளது.
தரம் 3, 4, 5, 10, 11 மற்றும் 12, 13 மாணவர்கள் கட்டாயமாக தனியார் வகுப்புக்களுக்கு செல்கின்றனர். தனியார் வகுப்புக்களில் தகுதியற்றவர்களும் வகுப்பு நடாத்துகின்றனர்.
இது ஒர் பாரதூரமான நிலைமை எனவும் தனியார் வகுப்புகள் ஒழுங்குபடுத்தப்படாவிட்டால் அது மாணவர்களை மோசமாக பாதிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |