முல்லைத்தீவு கடற்கரை வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வேலி: தொடரும் சர்ச்சை
முல்லைத்தீவு (Mullaitivu) - தியோநகர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் கடற்கரைக்கு செல்லும் வீதியில் இடப்பட்டுள்ள வேலி தொடர்பில் பிரதேசசபை விளக்கக் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது.
குறித்த கடிதமானது, நேற்றையதினம் (30.05.2024) முல்லைத்தீவு பிரதேச சபையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில், தியோநகர் பகுதியில் உள்ள கடலுக்கு செல்லும் வீதியை மறித்து தனியார் நிறுவனம் ஒன்றினால் சட்டவிரோதமாக வேலி ஒன்று அமைக்கப்பட்டது.
பொது வீதி
இந்நிலையில், இது தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு கோரி அப்பகுதி கிராம அமைப்புக்களால் பிரதேச சபைக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்த நிலையிலேயே அதற்குரிய பதிலை பிரதேச சபை வழங்கியுள்ளது.
குறித்த பதில் கடிதத்தில், வேலியடைக்கப்பட்ட வீதியானது பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது வீதி என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் அந்த தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக வேலியினை அமைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு பின்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |