தனியார் வகுப்பு உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது..!
ஹொரணை நகரப் பகுதியில் பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், 44 வயதுடைய ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரணை நகரில் பிரபல மேலதிக வகுப்பு நிலையமொன்றை நடத்திவரும் நிலையில், ஹொரணை பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என்றும் தெரியவந்துள்ளது.
ஐஸ் போதைப்பொருளுடன் கைது
சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை மற்றும் இலத்திரனியல் தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நர்த்தனகல பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்குப் பொலிசார் சென்ற போது, அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சந்தேகநபர் மீது இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
சந்தேகநபரைத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி விவகாரம்.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி வெளியிட்டுள்ள பதிவு
you may like this video