தனியார் பேருந்து, கார் சாரதிகள் வீதியை மறித்து முரண்பாடு: 30 நிமிடங்கள் பாதிப்படைந்த போக்குவரத்து
வவுனியா - மன்னார் வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் மகிழுந்து ஒன்றும் வீதியை மறித்து முரண்பட்டமையால் அவ் வீதியூடான போக்குவரத்து சுமார் அரை மணிநேரம் பாதிப்படைந்தது.
இன்று (02.12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவிலிருந்து மன்னார் வீதி வழியாகச் சென்ற கார் ஒன்று வேப்பங்குளம் பகுதியில் வீதியின் பால திருத்த வேலை இடம்பெறும் நிலையில் ஒரு பகுதியில் செல்ல அனுமதிக்கப்பட்ட வீதி ஊடாக செல்ல முற்பட்ட போது, மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேரூந்தும் அவ் ஒரு வழி பாதையின் ஊடாக செல்ல முற்பட்டது.
இதனால் இரண்டு வாகனங்களும் செல்ல முடியாமையால் ஒருவரையொருவர் வாகனத்தை பின்னோக்கிச் செல்லுமாறு கூறினார். இருவரும் தத்தமது வாகனத்தை பின்னோக்கி எடுக்க மறுத்த நிலையில் இரு பகுதியினருக்கும் முரணப்பாடு ஏற்பட்டது.
முரண்பாட்டையடுத்து இருவரும் ஒரு வழிப் பாதையை வழிமறித்து தத்தமது வாகனத்தை நிறுத்தி வந்திருந்தமையால் அவ்வீதி ஊடாக போக்குவரத்துக்கள் சுமார் அரை மணிநேரம் பாதிப்படைந்திருந்தது. இதனையடுத்து அவ்வீதி வழியாகச் செல்ல முடியாமையால் மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
போக்குவரத்து பொலிஸார்
சம்பவ இடத்திற்கு வருகை தந்து வாகனங்களை அகற்றியதுடன், போக்குவரத்தை இயல்பு
நிலைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார்
முன்னெடுத்துள்ளனர்.






புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
