வடமராட்சியில் சிறுவனுக்கு அதிக கட்டணம் அறவீடு செய்த தனியார் பேருந்து நடத்துனர்!
வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் ஒருவருக்கு ஒரு வார பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
10 வயதிற்கு உட்பட்ட சிறுவனிடம் முழு பயணக் கட்டணம் அறவிட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வார பணித்தடை
குடத்தனையிலிருந்து மருதங்கேணி சென்ற சிறுவனிடம் வயது வந்தோருக்கான முழு கட்டணம் அறவிடப்பட்டதாக அவரது தந்தை சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நடத்துனர் விதிமுறைகளை மீறி முழு கட்டணம் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நடத்துனருக்கு ஒரு வாரம் பணியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் மருதங்கேணியிலிருந்து குடத்தனை வரையான பயணத்திற்கு பெரியவர்களுக்கு 108 ரூபாயும், சிறுவர்களுக்கு 54 ரூபாயும் அறவிடப்படுகிறது.
ஆனால் தனியார் பேருந்துகளில் இதே தூரத்திற்காக 140 ரூபாய் கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.