சாகர காரியவசத்தின் கருத்தால் அரசியல் அரங்கில் புதிய சர்ச்சை..!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துக்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பொலிஸ்மாதிபரை (Police Chief) மக்கள் வீதியில் வைத்து அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று எச்சரிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது.
இது ஒரு கடுமையான அச்சுறுத்தலாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் சவாலாக இது பார்க்கப்படுகிறது.
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இத்தகைய கருத்துக்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...