பழைய போகம்பர சிறைக்கு மாற்றப்படும் கைதிகள் - அதிகாரிகள் பற்றாக்குறையால் அதிரடி தீர்மானம்
கைதிகள் அடுத்த வாரம் பழைய போகம்பர சிறைக்கு மாற்றப்படுவார்கள் என இலங்கைச் சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து வருவதாக சிறைத்துறை ஆணையாளர் எஸ்.கே. பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்க நடவடிக்கை
இதற்கமைய, கைதிகள் உடனடியாக சிறைக்கு மாற்றப்படுவார்கள் என்றும், இவ்வாறு மாற்றப்படும் கைதிகளில் பெரும்பாலோர் நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பழைய போகம்பர சிறையில் பணிகளை மேற்கொள்வதற்கு சிறை அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதற்குத் தீர்வாக ஓய்வுபெற்ற சிறை அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்தத் திட்டங்கள் உள்ளதாகவும் எஸ்.கே. பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.