மகிந்தவுக்கு எதிராக பொலன்னறுவையில் களமிறங்கும் அநுர - மாபெரும் பேரணிக்கு அழைப்பு
“நமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிறது - நாட்டிற்கு நல்லது” என்ற கருப்பொருளின் கீழ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டங்களின் தொடரின் ஒரு பகுதியாக விவசாயிகள் பேரணியொன்று இடம்பெறவுள்ளது.
இந்த பேரணி இன்று(12.09.2026) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பேரணி மாலை 4.00 மணிக்குத் தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் பேரணி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் “நமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிறது - நாட்டிற்கு நல்லது” என்ற பேரணித் தொடர், கடந்த வாரம் 6ஆம் திகதி களுத்துறை மாவட்டத்தில் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இதற்கு முன்னரான பேரணி பேருவளை கடற்கரை மைதானத்தில், இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.