38 வருடங்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அதிபர் ஓய்வு

Sri Lanka Upcountry People Sri Lankan Peoples Sri Lanka Government Teachers
By Amal May 04, 2026 01:34 PM GMT
Report

கல்விப்புலத்தில் 38 வருட கால அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அதிபர். இராமு பத்மாவதி அரச பாடசாலை பணிகளில் இருந்து இன்னும் 3 நாட்களில் ஓய்வு பெறவுள்ளார்.

கண்டி-புசல்லாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இவர், மலையகக் கல்வித்துறையில் சுமார் 38 வருடங்களாக ஆசிரியராகவும், அதிபராகவும் அளப்பரிய சேவையாற்றி வந்தார்.

இதனைத் தொடர்ந்து, தனது நீண்டகால அரச பாடசாலைக் கல்விப் பணியிலிருந்து எதிர்வரும் 07.05.2026 அன்று பணி ஓய்வு பெறவுள்ளார்.

கல்விப் பயணத்தின் மைல்கற்கள்

கடந்த 1988 ஆகஸ்ட் 29 அன்று தனது முதல் நியமனத்தைப் பெற்றுக்கொண்ட இவர், கண்டி மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளில் பணியாற்றி மாணவர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்து கொண்டவராக திகழ்கிறார்.

கண்டி - புப்புரஸ்ஸ ஸ்டெலன்பர்க் தமிழ் வித்தியாலயத்தில் தனது முதல் நியமனத்தைப் பெற்று 03 ஆண்டுகள் (1988–1992) பணியாற்றினார். நுவரெலிய- கொட்டகலை, யதன்சைட் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1992 முதல் 1993 வரை இரண்டு ஆண்டுகள் முறையான ஆரம்பக்கல்வி ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்.

38 வருடங்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அதிபர் ஓய்வு | Principal Retires After 38 Years Of Service

பயிற்சியின் பின்னர் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் ஓராண்டு காலம் (1994–1995) பணியாற்றினார். புசல்லாவ - பிளக்பொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் நீண்டகாலச் சேவை புரிந்தார்.

இதனைத் தொடர்ந்து, அதிபர். இராமு பத்மாவதி தமது சேவைக்காலத்தில் மிக நீண்ட பணியை சுமார் 25 வருடங்களாக புசல்லாவ பிளக்பொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ந்துள்ளார்.

இந்த பாடசாலையில் 03 ஆண்டுகள் ஆசிரியையாகவும், இரண்டரை ஆண்டுகள் பதில் அதிபராகவும், 20ஆண்டுகள் அதிபராகவும் கடமையாற்றி, பாடசாலையின் பௌதீக மற்றும் கல்வி ரீதியான வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தார்.

நிறைவுப் பணி

தனது சேவையின் இறுதிப் பகுதியாக புசல்லாவ ரொத்ஸ்சைல்ட் தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2026 மே 07 வரை சுமார் 06 ஆண்டுகள் அதிபராகப் பணியாற்றி எதிர்வரும் 07.05.2026 தனது அரச பாடசாலை பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

பணியில் இருந்து ஓய்வுபெறும் அதிபர். இராமு பத்மாவதியின் எதிர்கால வாழ்வு சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.    

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US