தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 23 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (திங்கட் கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய, தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை முடிவு செய்யும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
112 இடங்களில் முன்னிலை
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 112 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.

தமிழ்நாட்டில் ஒரு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 118 தொகுதிகள் தேவைப்படுகின்றன.
இந்த சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 112 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! பெரும்பாலான அமைச்சர்கள் பெரும் பின்னடைவு
மதுரை மாவட்ட தொகுதிகளில் முன்னிலை
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போதைய 6ஆம் சுற்று முடிவுகளின் அடிப்படையில் தமிழக வெற்றி கழகம் பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 80.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் 6ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் படி, மதுரை மத்திய தொகுதியில் தமிழக வெற்றி கழகம் 9,493 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. மதுரை கிழக்கு தொகுதியில் திமுக 690 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
மதுரை வடக்கு தொகுதியில் தவெக 7,830 வாக்குகள் வித்தியாசத்திலும், மதுரை தெற்கு தொகுதியில் 3,569 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளது.
மதுரை மேற்கு தொகுதியில் திமுக 761 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. மேலூர் தொகுதியில் அதிமுக 378 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.
10 தொகுதிகளிலும் களநிலவரம்
அதேபோல், சோழவந்தான் (தனி) தொகுதியில் திமுக 3,799 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக 2,962 வாக்குகள் வித்தியாசத்திலும், திருமங்கலம் தொகுதியில் திமுக 3,604 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளன.
உசிலம்பட்டி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் 1,115 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போதைய சுற்று முடிவுகளின் அடிப்படையில் தமிழக வெற்றி கழகம் பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
இருப்பினும், இறுதி முடிவுகள் வெளியாகும் வரை நிலவரங்களில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்