வாக்கெண்ணும் மையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தவெக நிர்வாகி - விஜய்யின் படத்தால் ஏற்பட்ட நிலைமை
நாகை வாக்கு எண்ணும் மையத்தில் விஜய்யின் உருவம் பொறித்த சட்டையை அணிந்து உள்ளே சென்ற தவெக நிர்வாகி ஒருவர் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு கட்சிகளின் முகவர்களும் உள்ளே சென்று தங்களது பணியை தீவிரமாக மேற்கொள்ள இருந்தனர்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் எந்த ஒரு கட்சியின் கொடி மற்றும் கட்சி துண்டு ஆகியவை அணிந்து செல்ல கூடாது, மொபைல், சிகரெட் போன்ற எந்த ஒரு பொருட்களையும் உள்ளே எடுத்து செல்லக்கூடாது என பல்வேறு அறிவுறுத்தல்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.
அறிவுறுத்தல்
இந்த சூழலில் நாகை வாக்கு எண்ணும் மையத்தில் தவெக நிர்வாகி ஒருவர் விஜயின் உருவம் பொறித்த சட்டையை அணிந்து உள்ளே சென்றுள்ளார்.

இதனை தடுத்த பொலிஸார் இதற்கு அனுமதி இல்லை என்றும் தங்களது சட்டையை உடனடியாக மாற்றிக் கொண்டு பின்னர் உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
முதலில் இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தவெக நிர்வாகி பின்னர் அங்கிருந்து வெளியேறி தனது ஆடையை மாற்றுவதற்காக சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு