யாழில் மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர் கைது
யாழ்ப்பாணத்தில் மாணவர் ஒருவரை கடுமையாகத் தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். கோப்பாய் பொலிஸார் நேற்றையதினம் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
யாழ். இருபாலைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மீது அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
பெற்றோருக்கு அழுத்தம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இரு மாணவர்களுக்கிடையில் புத்தகப் பை தொடர்பில் இழுபறி ஏற்பட்டதாகவும் ஒரு மாணவனை அழைத்த குறித்த ஆசிரியர் தடியாலும் கைகளாலும் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆசிரியர் புத்தூர் சோமஸ்கந்த பாடசாலையில் விஞ்ஞான பாடம் கற்பிப்பவர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் குறித்த ஆசிரியரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், ஆசிரியரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவிடாமல் தடுப்பதற்காக, ஒரு தரப்பினர் பெற்றோருக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், குறித்த ஆசிரியரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri
