சஜித் பிரதமராக பதவியேற்க தயாரெனில் ஆதரவு: ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பகிரங்க அறிவிப்பு
சஜித் பிரதமராக பதவியேற்க தயாரெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாடாளுமன்ற சுயாதீன அணி ஆதரவளிக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று மகாசங்கத்தினருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்கத் தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அணியும் தயாராக உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam