ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்தர கல்வியை வழங்குவதன் அவசியம் -வலியுறுத்தும் பிரதமர்
புதிய இணைப்பு
இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்தர கல்வியை வழங்குவதன் அவசியத்தை, வலியுறுத்தியுள்ளார்.கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய, வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் இன்று, ஆய்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோதே அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, பிரதமர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஒரு சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார், மே அத்துடன், பாடசாலையின் Independently அவர் பார்வையிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய அவர், யாழ்ப்பாண இந்து கல்லூரி இலங்கையின் மிக முக்கியமான பள்ளிகளில் ஒன்றாகும், இது நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பாடசாலையின், நிதி நிர்வாகத்தில் காட்டப்படும் வெளிப்படைத்தன்மை மற்ற நிறுவனங்களுக்கு, ஒரு முன்மாதிரியாக கருதப்படுகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கல்வி மரியாதைக்குரிய, நெறிமுறை மற்றும் திறமையான தலைமையை வளர்ப்பதை உறுதி செய்வதே அரசாங்த்தின் பொறுப்பு, என்றும் அவர் கூறியுள்ளார் .
மேலதிக தகவல்: இந்திரஜித்
இரண்டாம் இணைப்பு
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
யாழ்ப்பாண விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ். சுழிபுரம், வழக்கம்பரை முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்.
குறித்த கூட்டத்தில் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா, கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலதிக தகவல்: தீபன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு இன்று (15) மதியம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார்.
இதன்பின் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஶ்ரீபவானந்தராஜா , றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ஆசிரியர் கலாசாலை அதிபர் லலீசன் மற்றும் கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்கின்ற மக்கள் சந்திப்பானது இன்றையதினம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள மோகன் அரங்கில் ஆரம்பமாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







கிளீன் தையிட்டி..! 2 நாட்கள் முன்

வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: ஜேர்மனியில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் ஆச்சரிய முடிவுகள் News Lankasri
