குழந்தைகளுக்கான நன்கொடை நிதியில் மோசடி : இருவர் கைது
நன்கொடையாளர்களிடமிருந்து பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புற்றுநோய் நிதிக்கு நிதியளிப்பதற்காக லிட்டில் ஹார்ட்ஸ் நிதியின் பெயரைப் பொய்யாகப் பயன்படுத்தி பொதுப் பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேக நபர்களையே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (15) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க (Buddhika Manatunga) இதனை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள்
குறித்த சந்தேக நபர்கள் நன்கொடையாளர்களிடமிருந்து 2.9 மில்லியன் ரூபாவைப் பெற்று, அதை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தியதாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்குவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
அந்த திட்டத்தின் பெயரை ஒரு குறிப்பிட்ட தரப்பினர் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபடுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
