வாகன இறக்குமதி தடையால் ஏற்பட்டுள்ள சிக்கல்!
2020ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதித் தடையை முற்றிலுமாக நீக்குவது குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தை தொடர்ந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், வாகன இறக்குமதியாளர்கள் பல இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே, ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில், இலங்கை வங்கிகளால் வழங்கப்படும் கடன் கடிதங்களை (LC) ஜப்பானின் முன்னணி வங்கிகள் மறுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "2020 ஆம் ஆண்டு வாகன இறக்குமதி தடை விதிக்கப்பட்ட போது அரசாங்கம் எடுத்த முறையற்ற முடிவின் காரணமாக, முன்னணி ஜப்பானிய வங்கிகள் இப்போது இலங்கையின் கடன் கடிதங்களை மதிப்பிடுகின்றன. இது வாகன இறக்குமதியாளர்களுக்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
ஜப்பானிய வங்கிகள்
நிதிச் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர தலைமையிலான நிதி அமைச்சகம், ஏற்கனவே கடன் பத்திரங்களை வழங்கிய வாகனங்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்ய எடுத்த தவறான முடிவுகளின் காரணமாகவே, தற்போது இவ்வாறான பிரச்சினைகள் எழுந்துள்ளன.

எனவே, இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் இந்திக சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிற்குப் பதிலாக வாகனத்தின் உற்பத்தி திகதி தொடர்பான தொழில்நுட்பச் சிக்கலையும் சரிசெய்யுமாறு அரசாங்கத்திடம் மேலும் கோரியுள்ளார்.
உற்பத்தி திகதி
குறித்த உற்பத்தி திகதி தொடர்பான விதிமுறை 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பழைய வாகனங்ளை இறக்குமதி செய்வதற்கு சிக்கலான ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளால், வாகனங்களின் விலைகளும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உற்பத்தி திகதி தொடர்பான விதிமுறை இந்த காலவரையறையை 5 ஆண்டுகளாக அதிகரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் இதனால் குறைந்த தேவை மற்றும் குறைந்த விலையில் அதிக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        