பொருளாதார நெருக்கடியை தணிக்க ரணிலின் திட்டம்! நடத்தப்பட்ட சந்திப்பு!
நடப்பு பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் வரைபு ஒன்றை நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வரைபை இறுதி செய்வதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது இறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்தபோதே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் குறுகிய மற்றும் நடுத்தர கால இலக்குகள் பற்றிய விளக்கத்தை இதன்போது வழங்கினார்.

இதனை தொடர்ந்து, பொருளாதாரப் பேரழிவைத் தணிக்கப் பயன்படுத்தக்கூடிய சாத்தியமான வழிமுறைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, குமார வெல்கம, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அமைச்சர்கள் மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.





ஆரம்பமானது ரணிலின் சாணக்கிய நகர்வு- வசப்படுத்திக்கொண்ட முக்கிய அமைச்சு!