சந்தையில் மீண்டும் பல பொருட்களின் விலை உயர்வு
சந்தையில் மேலும் சில பொருட்களின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்வடைந்துள்ளன.
இந்த நிலையில், அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய விலைகள்
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நடுத்தர அளவான பற்பசை ஒன்றின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் 160 கிராம் நிறைக் கொண்ட பற்பசையின் புதிய விலை 310 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட நகர பகுதிகளில் உள்ள மக்கள் அதிகளவு உட்கொள்ளும் உடனடி நூடில்ஸ் பொதியொன்று 120 ரூபாவாக அதிகரித்துள்ளது. முன்னதாக அந்த நூடில்ஸ் பொதி 55 முதல் 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
அத்துடன் பிஸ்கட் வகைகளின் விலைகளும் மீண்டும் அதிகரித்துள்ளன.மேலும் வாசிக்க

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
