அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் ஐந்து அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்கத் தீர்மானித்துள்ளது.
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய விலைப்பட்டியல்
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் முந்தைய விலை ரூ.175, புதிய விலை ரூ.150 ஆகும்.
இதேவேளை, ஒரு கிலோ வெள்ளை சீனி 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 278 ரூபாவாகும்.
முன்னதாக ஒரு கிலோ வெள்ளை சீனி 285 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், 185 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை பச்சை அரிசியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 179 ரூபாவாகும்.
மேலும், இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 185 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விலை 194 ரூபாவாகும்.
May you like this Video






6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
