அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
அரிசி, கோதுமை மா, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மீண்டும் நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலையை அறிமுகப்படுத்தில் சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, எதிர்வரும் நாட்களில் பால் மாவுக்கான விலையை கணக்கிட்டு புதிய விலை நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் எரிபொருள் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து உணவங்களில் உணவுகளின் விலைகள், சவர்க்காரங்களின் விலைகள், பாணின் விலைகள் அதிகரித்திருந்ததுடன், போக்குவரத்து கட்டணங்களும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
