உலக சந்தையில் முதல் முறை! வரலாறு காணாத விலை உயர்வை பதிவு செய்த தங்கத்தின் விலை..
வரலாற்றில் முதல் முறையாக உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகளவில் அதிகரித்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார பதற்றங்களுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நாடி வருவதால், தங்கத்தின் விலை முதன்முறையாக $5,000-ஐ கடந்துள்ளது.
உலக நிதி நெருக்கடி
கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் 8 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது 2008ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடிக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய வாராந்திர உயர்வாகும்.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை வரலாற்று ரீதியாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், தங்கத்தின் விலை மேலும் உயர்வடையக்கூடும் எனவும், இவ்வருட இறுதிக்குள் அது 5,500 டொலரை தாண்டும் எனவும் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க டொலர்
அத்துடன், இதற்கு இணையாக ஏனைய உலோகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதுடன், அதற்கமைய ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 1.74% இனால் அதிகரித்து 107.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

மேலும், ஒரு அவுன்ஸ் பெலேடியத்தின் (Palladium) விலை 0.17% இனால் அதிகரித்து 2,013.50 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர், அதன் முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமை கணிசமாக வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri